ஐசிசியின் அதிசிறந்த வீர, வீராங்கனை விருதுகளை இந்தியர்கள் சுவிகரித்தனர்

0
87

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மாதாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த வீரர், அதிசிறந்த வீராங்கனை ஆகிய ஜூன் மாதத்திற்கான விருதுகளை இந்தியர்கள் இருவர் சுவீகரித்துள்ளனர்.

ஐசிசியின் அதிசிறந்த வீரர் விருதை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா வென்றெடுத்ததுடன் ஐசிசியின் அதிசிறந்த வீராங்கனை விருதை அதிரடி துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா தனதாக்கிக்கொண்டார்.

இவர்கள் இருவருமே ஐசிசி மாதாந்த விருதுகளை வென்றது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் இந்தியர்கள் இருவர்  ஒரே மாதத்தில் அதி சிறந்த வீரராகவும், அதிசிறந்த வீராங்கனையாகவும் தெரிவானது இதுவே முதல் தடவையாகும்.