பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் போட்டியிடார்: உதயங்க வீரதுங்க

0
96

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், மொட்டு கட்சி நிச்சயமாக வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி அமைத்துக்கொண்டாலும் சின்னத்தில் மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.