ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்அரசியல் களத்தில் இரட்டை வேடம்போடுகிறது- ஏ.எம்.ஏ.பிர்தௌஸ் கருத்து

0
77

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய அரசியல் களத்தில் இரட்டை வேடம்போடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி பிரதம அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க ஒரு கட்சிக்கான தலைவர் என்பதை விட இந்த நாட்டிற்கான ஜனாதிபதி என்ற அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட நிதியினை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு தொகுதி பிரதம அமைப்பாளர் ஏ.எம்.ஏ.பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.

‘மக்களை மிகத் தெளிவாக ஏமாற்றும் வேலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்கிறது’, ‘பேரம் பேசும் அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சி செய்து வருகிறது என மட்டக்களப்பு- ஏறாவூரில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.