ஹிக்கடுவ, தொடகுமாவ, மொலபு ஓயாவில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களில் ஒருவர் நீரோடையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக மீட்டியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் சுதத் குமார என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எசல பெரஹராவை பார்க்க வந்த 9 பேர் கொண்ட சிறுவர்கள் குழுவொன்று நீரில் மூழ்கியதாகவும், இரண்டு சிறுவர்கள் உயிர்காக்கும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இன்று காலை வரை காணாமல் போன சிறுவன் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் முயறசியை முன்னெடுத்து வருகின்றனர்