தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு, இரண்டு இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்குவதற்கான பதிவு, கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.
இதன் போது, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 30 பேருக்கான பதிவு, மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அழைக்கப்பட்ட 30 பேரும், தமது பதிவுகளை மேற்கொண்டனர்.
இழப்பீட்டுக்கான அலுவகத்தினுடைய பணிப்பாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி, உத்தியோகத்தர்களை சந்திக்கும் முகமாக, கிளிநொச்சி மாவட்ட செயலகம் விஜயம் செய்திருந்தார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர்,இதுவரை இழப்பீட்டு அலுவலகத்தினால், பொருளாதார நெருக்கடியில் உள்ள, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 2 ஆயிரத்து 500 பேருக்கு, இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், வெகுவிரைவில் ஏனையவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.