மட்டக்களப்பு ஏறாவூர், ஐயங்கேணி ஹிஸ்புல்லா வித்தியாலய விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கமைவாக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஒபன் கெயார் நிறுவனத்தின் நிதியுதவியுடன், பாடசாலை அதிபர் எம்.ஜி.ஏ.நாஸர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைக்கான பயன்பாட்டுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
ஏறாவூர் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன்,அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் முகமட் பாறூக், மற்றும் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது பொருட்களைக் கையளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மாணவர்கள் தமது நன்றியினை தெரிவித்தனர்.