எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, கட்டுப்பணம் செலுத்தப்பட்டது : ஜனாதிபதி ரணில்

0
103

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும், சிறந்த நாட்டை உருவாக்க, அனைத்து அரசியல் கட்சிகளும், பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, காலி மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற, ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, இவ்வாறு குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க, அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய உடன்பாடுகளை, முன்னோக்கி நகர்த்த வேண்டும்.அந்த வரைவுக்கு முரணாக செல்ல முடியும் என யாராவது கூறினால், அவர்கள் நாட்டை ஆபத்தில் தள்ளிவிடும் பொய்யைச் சொல்கிறார்கள்.
என குறிப்பிட்டுள்ளார்.