நாமலுக்கு எதிராக பந்துல பொலிஸில் முறைப்பாடு

0
51
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ கட்சி ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.