மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் தமிழ் தினப்போட்டிகள்

0
92

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தினப்போட்டிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. சுவாமி விபுலானந்தரின் நினைவாக தேசிய தமிழ் மொழி தினம் அரசினால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு பட்டிருப்பு, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா வலயங்களின் பிரதிக்கல்விப்பாளர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இஸ்லாமிய சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.