அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro max) கையடக்க தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய வகை ஐபோன் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் வழக்கத்தின்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடவுள்ளன.
இந்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் தொலைபேசிகளில் செயற்றிறன் மற்றும் கமாராக்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காணப்படும்.
பிரகாசமான திரை
அந்தவகையில், ஐபோன் 16 ப்ரோ அளவில் பெரிய மற்றும் பிரகாசமான திரை, சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத் தேர்வுகளைக் (Connectivity Options) கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.
ஐபோன் 16 ப்ரோவின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக பெரிய OLED திரைகள் (டிஸ்ப்லே) இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் திரை அமைப்பை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ திறன்
இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகின்றது.
கூடுதலாக, ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் (திரையின் எல்லை) வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் இருக்கும்.
16 ப்ரோ வகைகளில் அப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறுவதால் கனிசமாக செயல்திறனை உறுதிப்படுத்தும்.
குறிப்பாக, அப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.
கமரா சென்சார்கள்
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறுமெனவும் இரண்டும் 48 மெகாபிக்சல் (Mega Pixel) அல்ட்ரா-வைட் (Ultra Wide) கமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைகைகளைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 வகைகளின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது.