இலங்கைக்கான சீனத் தூதுவருடன் சந்திப்பு!

0
53

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ. சென்ஹோங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விவகாரங்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் மிகவும் சுமுகமான பயனுள்ள கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.