இன்றும் தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு!

0
46

கிராம உத்தியோகத்தர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு மற்றும் கறுப்பு வாரம் இன்றும் தொடர்கிறது.
தங்களது கோரிக்கை தொடர்பில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவுடன் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தங்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றைய தினமும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.