அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், ஆதரவுயாருக்கு?- நாளை விசேட அறிவிப்பு

0
113

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடல் நேற்று மட்டக்களப்பு மீராவோடைப் பகுதியில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி மத்திய குழு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில், அக் கட்சியின் தலைவர் ரிசார்ட் பதியுதீனும் பங்கேற்றார்.
நாளை புதன் கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடத்தால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவுக்கு, கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.