30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நுவரெலியாவில் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம்!

நுவரெலியா, பூண்டுலோயா, சீன் கீழ்ப்பிரிவில் ஏற்பட்ட தீபரவலால் பாதிக்கப்பட்டு தோட்ட ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் நேரில் சென்று சந்தித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, உடை, பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் வழங்கி வைத்தார்.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா சீன் கீழ்ப்பிரிவில் கடந்த 16ம் திகதி 24 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பொன்று தீக்கரையாகியது. சம்பவத்தில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles