இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி போலந்திற்கு விஜயம்

0
73

உத்தியோகபூர்வ விஜயமாக போலந்துக்குச் சென்றுள்ள, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
போலந்து மற்றும் இந்திய தூதர உறவின் 70வது வருட நிறைவை முன்னிட்டு, மோடியின் போலந்து பயணம், முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகின்றது.

போலந்து பயணத்தை நிறைவு செய்த பின்னர், நாளைய தினம் இந்தியப் பிரதமர், உக்ரைனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ரஸ்ய மற்றும் உக்ரைனிடையேயான போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆசிய நாடொன்றின், சக்தி வாய்ந்த தலைவரது, உக்ரைன் விஜயம், சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றுள்ளது.