மட்டக்களப்பு கல்குடா சைவ குருமார் சங்கத்தால், பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த, தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.
இரண்டாவது கட்ட உதவியாக, கல்குடா சைவ குருமார் சங்கத்தின் செயலாளர் சிவஸ்ரீ செ.குகராஜ் ஜயா தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன.
கிராமசேவகர்கள், பிரதேச பாடசாலை, அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.