மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத மக்களுக்கு பதிவுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடமாடும் சேவை இன்று நடைபெற்றது.
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி தலைமையில் நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டது. பிரதேசத்தின் 24 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி, நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.பிரபாகரனின் ஒழுங்கமைப்பில் சீ.ஜே.சீ நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற நடமாடும் சேவையில் சட்டத்தரணி டயானா சுஜிவா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.யேகராஜா, நிர்வாக உத்தியேகத்தர் எம்.கோமளேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.