மக்களின் வருமானத்தை அதிகரிக்க மானியங்களை வழங்கி வருவதாக ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

0
79

மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களோடு மக்களுக்கு மானியங்களை வழங்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

தான் வழங்கும் மானியத்துடன் நவீன விவசாயத்திற்கு ஏற்றவாறு உற்பத்தியை அதிகரிப்பதனால் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எந்தத் திட்டமும் இன்றி தாம் என்ன செய்கின்றோம் எனத் தெரியாமல் ஏனையோர் மானிய வாக்குறுதிகளை வழங்குவதாகக் கூறிய ஜனாதிபதி, பணமில்லை என்றால் நாட்டுக்கு எவ்வாறு மானியம் வழங்குவது என கேள்வி எழுப்பி எண்கணிதம் கூட தெரியாதவர்கள் எப்படி ஜனாதிபதியாக முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இந்நாட்டு விவசாயிகள் தமக்கு பாரிய ஆதரவை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2023ஆம் ஆண்டுக்கான பிரதான பருவகாலம் மற்றும் தைப்பூசப் பருவத்தை வெற்றியடையச் செய்தமைக்காக அனைத்து விவசாயிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

”2022 இல், நான் ஒரு சரிந்த நாட்டைப் பெற்றேன். நாட்டை கட்டியெழுப்ப அனைவரையும் அழைத்தேன். நாட்டைக் காப்பாற்ற முடியாது நாங்கள் வரமாட்டோம் என்று சிலர் கூறினர். ஆனால் மகிந்த ராஜபக்ச தலைமையிலான மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையான மக்கள் எனக்கு ஆதரவளித்தனர். அன்று முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அந்த ஆதரவைப் பெற்றேன். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்தத் தேர்தலுக்கு நான் அவர்களிடம் ஆதரவைக் கேட்கவில்லை. எந்த கட்சிக்கும் தேர்தலில் எந்த முடிவையும் எடுக்கும் திறன் உள்ளது. தனித்து போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிடுகிறோம். நாட்டில் நாம் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இந்த நாட்டின் விவசாயிகள் எனக்கு மிகுந்த ஆதரவை வழங்கியுள்ளனர். எனவே, இப்பகுதி விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 2023ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 84 பில்லியன் டொலர்களாக மாற்ற முடிந்தது. நாங்கள் பணத்தை பெற்றுக்கொண்ட போது அஸ்வசும” திட்டத்தின் கீழ் மக்களுக்கு மூன்று மடங்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இன்று அனைத்து துறைகளிலும் சலுகைகளை வழங்கியுள்ளோம். கரும்பு உற்பத்திக்கு உர மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த மானியங்கள் வழங்கப்படும் போது, மக்களின் வருமானம் அதிகரிக்கிறது. இதுதான் மற்ற கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

பணமில்லாமல் மானியம் கொடுப்பது எப்படி? எனவே வருமானத்தை அதிகரித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எண்கணிதம் தெரியாத இவர்கள் எப்படி நாட்டின் ஜனாதிபதியாக முடியும் என்று கேட்க விரும்புகிறேன்.

இந்நாட்டின் உற்பத்தி அதிகரித்து ரூபாயின் வலுவினால் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க முடியும். அந்த திட்டத்தை சமீபத்தில் தொடங்கினோம்.இளைஞர்களுக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

அப்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதற்கான திட்டத்தையும் சைனா மெர்ச்சன்ட் நிறுவனமும், சுபானா ஜூரோங் நிறுவனமும் தயாரித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் பாரிய அளவிலான திட்டமிடல் வலயத்தை உருவாக்குவதற்கு நான்காயிரம் ஏக்கர் நிலங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். மேலும், இந்த பகுதிக்கு சினோபெக் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. சினோபெக் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையின் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையமாகும். இந்த திட்டங்களின் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் அம்பாந்தோட்டைக்கு சுற்றுலா, கைத்தொழில், வர்த்தகம் மற்றும் துறைமுக பொருளாதாரத்தை கொண்டு வருவோம். இந்த முன்னேற்றத்திற்கு நாம் ஒன்றுபடுவோம். எனத் தெரிவித்துள்ளார்.