உக்ரைனின் பொல்டவா நகரின் மீது ரஸ்யா தாக்குதல்

0
45

உக்ரைனிய நகரமான பொல்டவா மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் 180 பேர் காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கல்வி நிலையங்களும் மருத்துவமனையொன்றும் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.