25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாக்காளர் அட்டைகளை விநியோகித்த உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகித்த களுத்துறை தெற்கு அஞ்சல் நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் களுத்துறை வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதானவர், களுத்துறை – ஜாவத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளான அஞ்சல் உத்தியோகத்தருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர், மோதலாக மாறியுள்ளது. 

அஞ்சல் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles