எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை, 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான, கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பை, தேர்தல் ஆணைக்குழு, கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளியிட்டது.
அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்கு சாகர காரியவசமும்,
சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு சுசிறி குணசுந்தர கஹவேவிதானவும்,
தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுவதற்கு ரத்ன கமகேவும், கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.