பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைவு!

0
71

பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி தமது 86ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் காரணமாக நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 மற்றும் 2000ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பெருவை ஆட்சி செய்த ஆல்பர்டோ புஜிமோரி ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக பதவி விலகினார்.
ஜனாதிபதியாகப் பதவிவகித்த போது இடதுசாரி கொரில்லா கிளர்ச்சிக்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாடு, புஜிமோரி மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.