நாடாளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானி வெளியீடு!

0
70

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்பின் 70ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைவாகவும் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10ஆம் பிரிவின் ஏற்பாடுகளை பின்பற்றியும் 2024 செப்ரெம்பர் 25ஆம் திகதி நள்ளிரவிலிருந்து நாடாளுமன்றத்தைக் கலைத்து 2024 நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதுடன் ஒக்ரோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யும் காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.