சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபங்களுக்கமைய அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று சமுர்த்தி சமூக அபிவிருத்தி
பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக
கலந்து கொண்டார்.
சமுர்த்தி முகாமைத்துவபணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன், கருத்திட்ட முகாமையாளர் கமலப்பிரபா, சமுர்த்தி முகாமையாளர்களான சுரேஸ்காந்த் மற்றும் கவிதா உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.