அம்பாறை மாவட்டத்தில்தமிழ் பிரதிநிதித்துவத்தைப்பாதுகாக்க, சிவில் சமூகபிரதிநிதிகள் முயற்சி

0
70

எதிர்வரும் பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும்,
ஓரணியில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.


அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில், காரைதீ பொதுநூலகக் கட்டடத் தொகுதியில், நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.


கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள் , அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்ததுடன், இன்றைய கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறினர்.