பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த ரஸ்யா திட்டமிட்டுள்ளது என பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்15 இன் தலைவர் எச்சரித்துள்ளார்.
பிரிட்டன் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கென் மக்கலம் ரஸ்யா நாசவேலைகள் உட்பட ஆபத்தான நடவடிக்கைகளை பொறுப்பற்ற விதத்தில் முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனை பிரிட்டன் ஆதரித்தமைக்காகவே ரஸ்யா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
2022 முதல் ஈரான் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட சதிமுயற்சிகளை முறியடியத்துள்ளதாக தெரிவித்துள்ள கென் மக்கலம் இஸ்லாமிய தீவிரவாதிகளே அனேகமான இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார்.
வலதுசாரி தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
இளவயதினர் அதிகளவிற்கு தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்,தீவிரவாத விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 13 வீதமானவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
2017 முதல் பிரிட்டனில் துப்பாக்கிகள் வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு பல முயற்சிகள் இடம்பெற்றன இவற்றில் 43 தாக்குதல் முயற்சிகளை இறுதி நேரத்தில் முறியடித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.