ஐக்கிய நாடுகள் சபையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. பேரவையால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான உத்தேச வரைவை அனுர அரசாங்கம் நிராகரித்திருக்கின்றது. வெளிச்சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை அனுமதிக்க முடியாதென்று கூறியுள்ள அரசாங்கம், உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறையை ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றது. அனுர அரசாங்கத்தின் அணுகுமுறை ராஜபக்ஷக்கள் கடைப்பிடித்த அணுகுமுறைக்கு ஒப்பானது.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைத்தான். ஏனெனில், இலங்கைமீதான சர்வதேச அழுத்தங்களை கையாளும் விடயத்தில் அனுர எந்தவொரு புதிய அணுகுமுறையையும் கைக்கொள்ள போவதில்லை என்பதைத்தான் இந்த முடிவு காண்பிக்கின்றது. இதில், ஆச்சரியப்பட ஏதும் இருப்பதாக ஈழநாடு கருதவில்லை – ஏனெனில், அனுரவின் அரசியல் பாரம்பரியத்திலிருந்து நோக்கினால், அவரால் இவ்வாறானதோர் அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்க முடியும்.
ஒருவேளை, சிலர் வாதிடலாம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றாலும்கூட அநுரவின் அணுகு முறையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. இதனை இரண்டு கோணத்தில் நோக்க வேண்டும் – அதாவது, இலங்கையின் வெளிவிவகார கொள்கையின் வழியாக நோக்க வேண்டும் – அடுத்தது, ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தை வழிநடத்துபவர்கள் எவ்வாறான அரசியல் பாசறையில் புடம்போடப்பட்டவர்கள் என்பதை ஆராயவேண்டும். இலங்கையின் வெளிவிவகார கொள்கை இரண்டு வகையில் அணுகப்படுகின்றது.
ஒன்று, வலதுசாரி பின்புலம் கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கின்றபோது, அவர்களின் அணுகுமுறை மேற்குலகு சார்பான கொள்கை நிலைப்பாடுடையதாக இருப்பதுண்டு. அதே வேளை, இடதுசாரி பின்புலம் கொண்ட அல்லது மேற்குலகு சார்பற்ற அரசாங்கங்கள் அமைகின்றபோது அவர்களின் வெளிவிவகார அணுகுமுறை சற்று வேறுபட்டதாக அமைந்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கின்றபோது அவர்களது அணுகுமுறை ஒருவாறு இருக்கும். அதேபோன்று, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருக்கின்றபோது, அவர்களது சர்வதேச அணுகுமுறை வேறுவிதமாக அமைந்திருக்கும். கடந்தகால அனுபவங்களிலிருந்து இதனை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இதேபோன்று, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரங்களில், அதற்கான ஒப்பந்தங்களின் வரலாற்றை எடுத்துநோக்கினால், அனைத்துமே மேற்குலக சார்பான ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில்தான் இடம்பெற்றிருக்கின்றது. சிறீலங்கா சுதந்திர கட்சியின் காலத்தில் ஒரு போதுமே இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், அநுரவின் அரசியல் பின்புலத்தின் அடிப்படையில் நோக்கினால், அவரால் ஒருபோதுமே மனித உரிமை சார் மேற்குலக அழுத்தங்களுடன் ஒத்துப்போக முடியவே முடியாது.
இந்த விடயத்தில் அவரின் அணுகுமுறையும் ராஜபக்ஷக்களின் அணுகு முறையும் ஒன்றுதான் – ஏனெனில், இது அவர்கள் எங்கு அரசியலை கற்றுக்கொண்டார்கள் என்பதிலிருந்தே நோக்கப்பட வேண்டியது. அநுரவின் உள்ளக அரசியல் அணுகுமுறையும் வெளியுறவுசார் புரிதலின் அடிப்படையிலும் ஒருபோதுமே இது சாத்தியப்படாது. எனவே, அநுரவின் அரசாங்கத்திடம் இறுதி யுத்தத்தின்போது இடம் பெற்றவை எனக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது. அநுரவின் தென்னிலங்கை ஆதரவுத் தளமும் அனுரவின் அரசியல்.