25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாகிஸ்தானை 9 விக்கெட்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா அரை இறுதி வாயிலை நெருங்கியுள்ளது

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (11) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட்களால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் மகளிர் உலகக் கிண்ண அரை இறுதி  வாயிலை நெருங்கியுள்ளது. ஏஷ்லி காட்னரின் 4 விக்கெட் குவியல் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 83 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில்  ஓவருக்கு 7.54 ஓட்டவேகத்தைக் கொண்டிருத அவுஸ்திரேலியாவின் நிகர ஓட்ட வேகம் நேர்மறை 2.786ஆக இருப்பதுடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கிறது. 4 புள்ளிகளுடன்இரண்டாம் இடத்திலுள்ள இந்தியாவைவிட 2.210 என்ற வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

அவுஸ்திரேலியா சார்பாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி அலிசா ஹீலி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தசை பிடிப்பு காரணமாக ஒய்வுபெற்றார். அவரைவிட எலிஸ் பெரி ஆட்டம் இழக்கமால் 22 ஓட்டங்களையும் பெத் மூனி 15 ஓட்டங்களையும் பெற்றனர். ஏஷ்லி கார்ட்னர் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.

மத்திய வரிசை வீராங்கனை ஆலியா ரியாஸ் மாத்திரமே ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 26 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார். அவரைவிட சித்ரா ஆமின், ஈராம் ஜாவிட் ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களையும் நிதா தார் 10 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக் எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்தவீச்சில் ஏஞ்ஷி கார்ட்னர் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அனாபெல் சதஃபீல்ட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜோஜியா வெயாஹாம் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெகான் சூட், மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனையானார்.

115 சர்வதேச மகளிர் ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள மெகான் சூட் 144 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் நிதார் தார் வசம் இருந்த 143 விக்கெட்கள் என்ற சாதனை மெகான் சூட்டினால் இன்று முறியடிக்கப்பட்டது.

இக் குழுவில் மேலும் 3 போட்டிகள் இருக்கின்றன. நாளைய தினம் இலங்கையை எதிர்த்தாடவுள்ள நியூஸிலாந்து, கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளது. இதனிடையே அவுஸ்திரேலியாவுக்கும்   இந்தியாவுக்கும் இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles