யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்துடன் 10 லீட்டர் கசிப்பும் இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.