யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய விசேட அதிரடிப்படையினரால் மேலும் இரு கைக் குண்டுகள் நேற்றைய தினம் மீட்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து கைக் குண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட வளாகத்தின் கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றை துப்பரவு செய்யும் போது இக் குண்டுகள் மீட்க்கப்பட்டன. யுத்தம் காரணமாக 35 வருடங்களாக பாவனையற்றிருந்த காணியில் இருந்த கிணற்றினை துப்பரவு செய்து கிணற்றில் இருந்த கழிவுகளை வெளிக் கொண்டுவந்த நிலையில் இதுவரை 11 வரையிலான கைக் குண்டுகள் மீட்க்கப்பட்டது. இதனையடுத்து காணி உரிமையாளரால் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து கைக் குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.