வாதுவை பிரதேசத்தில், சம்பவம்!

0
40

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாணவிகள், திடீரென சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாதுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 11 முதல் 12 வயதிற்குட்பட்ட நான்கு மாணவிகள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதற்கு சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.