25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டிரம்பின் வெற்றி குறித்து கறுப்பினத்தவர்கள் அச்சம் – ரொய்ட்டர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர்.

2020 இல் ஜோபைடன் வெற்றிபெற்றமைக்கு கறுப்பினமக்களின் வாக்குகளே முக்கியமானவையாக காணப்பட்டன . அந்த தேர்தலிலேயே முதலாவது ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ரொய்ட்டருடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட 25க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களில் அனேகமானவர்கள்  டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

டிரம்ப் சமஸ்டிபன்முகத்தன்மை மற்றும்உ உள்வாங்கல் திட்டங்களை கைவிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் சிவில் உரிமைகள் பறிபோகலாம் என கறுப்பினத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

டிரம்ப் பயன்படுத்திய இனவெறி மற்றும் பாலியல் மொழி குறித்து  கறுப்பின மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். விஸ்கொன்சினை சேர்ந்த ஒக்கிறீக்கின் 72 வயது ஓய்வுபெற்ற தாதியான மேரி ஸ்பென்செர் டிரம்பின் வெற்றியால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவர் எங்களை பற்றி என்ன நினைக்கின்றார் என்றால்- நாங்கள் கறுப்பினத்தவர்கள்,சட்டவிரோத குடியேற்றவாசிகள் செய்கின்ற வேலையை செய்ய முயல்கின்றோம் என நினைக்கின்றார், திறமையும் கல்வியறிவும் அவசியமற்ற வீட்டுவேலை போன்றவற்றை நாங்கள் செய்கின்றோம் என அவர் நினைக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதம் கறுப்பின ஊடகவியலாளர்களை சந்தித்தவேளை டிரம்ப் குடியேற்றவாசிகள் கறுப்பினத்தவர்களின்  வேலைகளை கைப்பற்றுகின்றனர் என தெரிவித்திருந்தார்.

ஹரிஸ் தேசத்தை ஐக்கியப்படுத்துவார்,இனரீதியான சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் கறுப்பின தொழில்முனைவோரான 51 வயது கட்ரீன ஹோம்ஸ் அவருக்கு வாக்களித்திருந்தார்.

அவரது கொள்கை நிகழ்ச்சி நிரல் – உரை போன்றவற்றை கருத்தில் கொள்ளும்போது இந்த விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு டிரம்பின் வெற்றி பாதிப்பை ஏற்படுத்தும், என்கின்றார் கட்ரீனா ஹோம்ஸ். பிரிவினை உணர்வு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி குறித்தும்,தங்கள் சமூகஅமெரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவர்களிற்கும் டிரம்பி;ன் வெற்றி உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் பெண்கள் பாலின கற்கைநெறியின் இயக்குநர் நடியா பிரவுன் தெரிவித்துள்ளார்.

அவரது சொல்லாட்சிகள், இனவெறி மற்றும் இனவெறி கருத்துக்கள் அனைத்தும் கவனத்தை சிதறடிக்கும் என  அவர் குறிப்பிட்டுள்ளார். ஹரிணியின் வருகைக்கான களத்தை உருவாக்க பலமாதங்களாக பாடுபட் கறுப்பின மக்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது இனசமத்துவத்திற்காக இன்னமும் தீவிரமாக கடுமையாக போராடுவதற்கு தங்களை உக்குவிக்கும் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் அனைத்தையும் மீள பெறுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை தடுப்பதற்காக நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் அணிதிரளப்போகின்றோம் என கறுப்பின பெண்களுடன் வெற்றிபெறுங்கள் என்ற அமைப்பை ஆரம்பித்த ஜொடாகா ஈடி தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles