பதுளை நகரில் சட்டவிரோதமாக பேரணி ஒன்றை நடத்தியதற்காக, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று காலை பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் குழுவுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த வேளையில் தேர்தல் கண்காணிப்பு நிலைய அதிகாரிகளும் பதுளை பொலிஸாரும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரிடம்; வாக்குமூலம் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.