அரச அலுவலகங்களுக்குப் பிரவேசிக்கும் பொதுமக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டியது அரச அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நிதி திட்டமிடல் சட்டம் மற்றும் ஒழுங்குதுறை உள்ளிட்ட பல துறைசார் அமைச்சசுக்களின் மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.அரச அலுவலர்கள் பொதுமக்களைத் தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் வகையில் செயற்படக் கூடாது. மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஆளுநர் அலுவலகத்துக்குப் பிரவேசிக்கின்றார்கள்.
அந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களும் வினைத்திறனாக பணியாற்றவேண்டும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.