இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணையை புறக்கணிப்பதாக, ஹங்கேரி
பிரதமர் விக்டர் ஆர்பின் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம், ஹங்கேரி அரசுக்குச் சொந்தமான வானொலியில் பேசிய அந்நாட்டுப் பிரதமர், அரசியல் காரணங்களுக்காக காஸா போரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையிடுவதாகவும், சர்வதேச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை புறக்கணிக்கும் விதமாக தங்களது நாட்டுக்கு வர இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அவரது முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், காஸாவில் படுகொலைகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு கிடைப்பதைத் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, இருவருக்கும் எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு, பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் வருகை தந்ததால், அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறான நிலையில், சர்வதேச நீதிமன்றில் அங்கத்துவம் வகிக்கும் நாடான ஹங்கேரியின் பிரதமர், தாம் அந்த பிடியாணை உத்தரவைப் புறக்கணித்து, தமது நாட்டிற்கு வருகை தர, இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.