அரச நிறுவனங்களில் தவறுகளைக் குறைக்க விஷேட சோதனை

0
318

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் அரச நிறுவனங்களை விஷேட சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை திங்கள்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளைக் குறைத்து, பொதுமக்களுக்கு செயல்திறன்மிக்க சேவையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளை ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.