கொரோனாவால் மரணம்; இதுவரை 45 சடலங்கள் அடக்கம்

0
216

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொரோனா சடலங்கள் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் நிலவிய பிரச்னைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் உடல்கள் அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.