பீரங்கி குண்டு வெடித்து 3 சிறுவர்கள் பலி! விளையாடியபோது விபரீதம்!!

0
26

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பீரங்கி குண்டு வெடித்ததில் சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மதப் பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போது கைவிடப்பட்ட பீரங்கி குண்டு ஒன்று கிடந்தது. அதை குறித்த சிறுவர்கள் பொம்மை என்று நினைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சிறுவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.