மைதானத்தில் மயங்கி சரிந்த ரென்னிஸ் வீரர்

0
19

போட்டியின்போது திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்த ரென்னிஸ் வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கியை சேர்ந்த ரென்னிஸ் வீரர் அல்டக் செலிக்பிலெக் (வயது -28). இவர் துனிசியாவில் நடைபெற்ற ஐ. டி. எப். ரென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் யாங்கி எரெல் உடன் மோதினார்.

ஆட்டம் தொடங்கி முதல் செட் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று அல்டக் செலிக்பிலெக் மைதானத்தில் மயங்கி விழுந்தார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வெளியான முதற்கட்ட தகவலின் படி, மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக அல்டன் செலிக்பிலெக் மைதானத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.