வவுனியாவில் அதிகாலை கடுமையான பனிமூட்டம் : சாரதிகள் சிரமம்

0
31

வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டமையினால், வாகன சாரதிகள் போக்குவரத்து செய்வதில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டனர். கடந்த நாட்களில் கடும் மழை பொழிந்ததன் பின்னர் நேற்று காலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டதோடு இன்றும் பனிமூட்டமான நிலை காணப்பட்டது.

அனைத்து பிரதேசங்களும் வெண்மையாக காட்சி அளித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதனால் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட சாரதிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டதோடு, மின் குமிழ்களை ஒளிர விட்டு வாகனங்களில் பயணித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.