மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை கல்வி பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா நேற்று மாலை இடம்பெற்றது.
ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் அருட்தந்தையுமான நவரெட்ணம் அடிகளார் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக அருட்தந்தை இயேசு சபைத்துறவி அனிஸ்டன் மொறாயஸ், இயேசு சபைத்துறவி அருட்தந்தை ஜோசப் மேரி, அருட்சகோதரர் பிரதீபன், முன்னால் பங்குத்தந்தை சுவைக்கின் ரொசான் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகள் உரை இடம்பெற்று, தேசிய ரீதியில் இடம்பெற்ற விவிலிய வினா வடை போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள், மறைக்கல்வி மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், பங்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.