மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக வருடாந்த ஒளி விழா அலுவலக பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களின் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி வெளியீட்டு திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் சுஜாதா குலேந்திரகுமார், ஆன்மீக அதிதிகளாக புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்கு தந்தை லெஸ்லி ஜெயகாந்தன், சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் குருவானவர் அருட்பணி ஜெகதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்த நிகழ்வில் மாணவர்களின் கலைப்படைப்புக்கள் அரங்கேற்றப்பட்டு, ஆன்மீக ஆசி செய்திகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு வலயகல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்கள், அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக பணியாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்