சீனப் பெண்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவருக்கும் பிரதமருக்குமிடையில் கலந்துரையாடல்

0
43

சீனப் பெண்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் யாங் டோங்மெய் (YANG DONGMEI), பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்திக்கான பரஸ்பர முயற்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவும் பாராட்டப்பட்டதுடன், பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.