மட்டக்களப்பு ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு

0
21

மட்டக்களப்பு ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயில்களுக்கு வேலி அமைப்பதற்கான நிதியுதவி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான உலருணவுப் பொதிகளும் நேற்றைய தினம் வழங்கப்பட்டன.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் நிதியுதவியுடன், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையினால் உதவிகள் வழங்கப்பட்டன. காத்தான்குடி உலமா சபையின் தலைவர் கபூர் மதனி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் சவாஹிர், காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் உட்பட உலமா சபை பிரதிநிதிகள், சம்மேளன பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.