மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்க குழுக் கூட்டம்

0
56

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்க குழு கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, சுற்றுச்சூழல் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் எஸ்.உதயராஜன் வழங்கினார்.

மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக துறைசார் நிபுனர்களுடன் கலந்துரையப்பட்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மண் அகழ்வு, தொழிற்சாலைகளுக்கான அனுமதி வழங்கல், திண்ம கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், சட்டவிரோத மணல் அகழ்வு, கரையோரங்களை அடையாளப்படுத்தல், போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சதர்ஷினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுனர்கள், சுற்று சூழல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.