மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் புகழுடல் தீயுடன் சங்கமமானது.
மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இறுதி சமய கிரியைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் அவரது புகழுடல் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
