கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட, கொழும்பு பேராயரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்திற்கு கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டிய பேராயர், கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற கடற்படைத் தளபதிக்கும் முழு கடற்படைக்கும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்துக் கொண்டார்.