அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நடமாடும் உணவு பாரவூர்தியில் இருந்து 100,000க்கும் மேற்பட்ட முட்டைகள் திருடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.திருடப்பட்ட முட்டைகளின் மதிப்பு சுமார் 40.000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
PETE AND JERRY’S ORGANICS மூலம் இயக்கப்படும் நடமாடும் உணவு பாரவூர்தியிலிருந்து இவ்வாறு முட்டைகள் திருடப்பட்டுள்ளன.அத்தோடு இந்த நாட்களில் அமெரிக்காவில் முட்டை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்கா முழுவதும் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாகஇ கடந்த வருடத்தை விட நாட்டில் முட்டை விலை சுமார் 65 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.