செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சட்டவிரோதமாக வீட்டுக்கு பெறப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.உயிரிழந்தவர் நெலும்வெவ சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினத்தன்று சுகயீனமுற்றிருந்த தனது தாய்க்கு உணவளிப்பதற்காக அருகில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் நாய்களிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அவரது தந்தையினால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சடலம் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.