எதிர்காலத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அமெரிக்க பயணம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் அடுத்த வாரம் உக்ரைன் ஜனாதிபதியை சந்திப்பேன் என்று நம்புவதாகக் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்திப்பு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து எவ்வித தகவல்களும் கூறவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.